மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை

சாத்தான்குளம் அருகே மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-12 17:10 GMT
சாத்தான்குளம்:
தட்டார்மடம் சிவன்குடியேற்று வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் அய்யாத்துரை மனைவி செல்வபூரணம் (வயது 65). இவர் அண்மையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டாராம். அதன்பின்னும் அவருக்கு கண் பார்வை சரியாக தெரியவில்லையாம். இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது கணவர் டீ குடிக்க வெளியே சென்று திரும்பியபோது செல்வபூரணம் வீட்டில் உள்ள விட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அவரது உறவினர் சித்தன்குடியிருப்பைச் சேர்ந்த செல்வக்குமார் (51) தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பவுலோஸ் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்