கடன் தொல்லையால் உணவு வினியோகிப்பாளர் தற்கொலை

கடன் தொல்லையால் உணவு வினியோகிப்பாளர் தற்கொலை.

Update: 2021-09-12 11:54 GMT
சோழிங்கநல்லூர்,

சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் வசித்து வந்தவர் தம்பான் அமிர்தராஜ் (வயது 50). தனியார் உணவு வினியோகிக்கும் நிறுவனத்தில் உணவு வினியோகிப்பாளராக வேலை பார்த்து வந்தார். கடன் தொல்லை மற்றும் போதிய வருமானம் இல்லாததால் மனமுடைந்து விரக்தியில் காணப்பட்ட அவர் சம்பவத்தன்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய மனைவி அளித்த புகாரின் பேரில் செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு காரணம் கடன் தொல்லையா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்