தேசிய கண்தான இருவார விழா: இந்தியாவில் 11 லட்சம் பேர் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பு

தேசிய கண்தான இருவார விழா சென்னை எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரியில் கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி முதல் நேற்று வரை நடந்தது. இதில் கண்தானம் குறித்த பல்வேறு விழிப்புணர்வுகள் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2021-09-09 05:14 GMT
இதுகுறித்து எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறியதாவது:-

இந்தியாவில் 60 லட்சம் பேர் பார்வையற்றவர்களாக உள்ளனர். இதில் கருவிழி நோயால் பார்வை இழந்து கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்காக 11 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். ஆண்டுக்கு 75 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கருவிழிகள் தேவையாக உள்ளன. ஆனால் 22 ஆயிரம் தான் கண் தானம் வாயிலாக கிடைக்கிறது. அதில் தர பரிசோதனைக்கு பின் 40 முதல் 50 சதவீதம் தான் பயன்படுத்தப்படுகிறது.எனவே கண்தானம் செய்வதன் வாயிலாக 60 லட்சம் பேருக்கும் மறுவாழ்வு அளிக்க முடியும். அனைத்து வயதினரும் கண்தானம் செய்யலாம். கண் கண்ணாடி அணிந்தவர்களும் செய்யலாம். ரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, புற்றுநோயாளிகள் என அனைவரும் கண் தானம் செய்யலாம்.கொடிய தொற்று நோய்களான எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, காலரா, விசக் காய்ச்சல், மூளைக்காய்ச்சல், வெறிநாய்க்கடி ஆகியவற்றால் உயிரிழந்தவர்களின் கண்களை மட்டுமே தானம் அளிக்க முடியாது. மற்ற அனைவரும் கண்தானம் செய்யலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

மேலும் செய்திகள்