பேட்டை:
நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி விலக்கு பூங்காநகரை சோ்ந்தவா் நடராஜன் மகன் சேகா் (வயது 54). இவா் கருப்புக்கட்டி மிட்டாய் வியாபாரி. இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். சேகருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இவா் நேற்று மதுவில் விஷம் கலந்து குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். மனைவி மாாியம்மாள் அவரை மீட்டு கல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சோ்த்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவா் செல்லும் வழியில் பாிதாபமாக இறந்தாா்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மாா்க்ரெட் திரேஷா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.