காயமடைந்த மயில் மீட்பு

அருப்புக்கோட்டை அருேக காயமடைந்த மயில் மீட்கப்பட்டது.

Update: 2021-09-08 21:06 GMT
அருப்புக்கோட்டை, ]
அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சியில் உள்ள கோவில் அருகே ஆண் மயில் ஒன்று அடிபட்டு காயம் அடைந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினருக்கு  தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரக அலுவலர் கோவிந்தன் தலைமையில் வனக்காப்பாளர் அபிஸ்செல்வகுமார், வேட்டை தடுப்பு காவலர் ராஜேந்திரபிரபு ஆகியோர் விரைந்து வந்து காயமடைந்த  மயிலை மீட்டு சுக்கிலநத்தம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உதவி கால்நடை மருத்துவர் சத்தியபிரபா முன்னிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மயிலை பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.

மேலும் செய்திகள்