வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது

வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-09-08 20:27 GMT
துறையூர்
துறையூரை அடுத்துள்ள சிங்களாந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 23). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 7-ந் தேதி நள்ளிரவு 1 மணியளவில் அதே ஊரில் வசித்து வரும் சித்தப்பா உறவு முறை உள்ள சந்திரசேகர்(37) என்பவருடன் மதுபோதையில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சிலம்பரசன், தனது நண்பர் சிறையில் இருப்பதாகவும், அவரை வெளியில் கொண்டுவர தனக்கு பணம் தேவைப்படுகிறது என்று சந்திரசேகரிடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சந்திரசேகரன் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து சிலம்பரசனை வயிற்றிலும், நெஞ்சுப் பகுதியிலும் குத்தினார். வயிற்றில் குத்தியதில் குடல் வெளியே வந்தது. திருச்சி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், வெளியூர் செல்ல முயன்ற சந்திரசேகரை துறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி கைது செய்தார்.

மேலும் செய்திகள்