440 ஊர்க்காவல் படையினருக்கு விருது

தஞ்சை மாவட்டத்தில் பணியாற்றும் ஊர்க்காவல்படையினர் 440 பேருக்கு விருது மற்றும் சான்றிதழை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா வழங்கினார்.

Update: 2021-09-08 19:52 GMT
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் பணியாற்றும் ஊர்க்காவல்படையினர் 440 பேருக்கு விருது மற்றும் சான்றிதழை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா வழங்கினார்.
ஊர்க்காவல்படை வீரர்கள்
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் ஊர்க்காவல்படையினர் பணியாற்றி வருகிறார்கள். இந்த 3 இடங்களிலும் 440 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கவாத்து பயிற்சி மற்றும் விருது வழங்கும் விழா தஞ்சை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு தஞ்சை சரக ஊர்க்காவல்படை தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு அமலதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மண்டல தளபதி சுரேஷ் வரவேற்றார்.
போலீஸ் சூப்பிரண்டு
விழாவில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா கலந்து கொண்டு விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஊர்க்காவல்படையினர் ஏதாவது ஒரு பணியை செய்து கொண்டு இந்த பணிகளையும் மேற்கொண்டு வருகிறீர்கள். ஏதாவது ஒரு அசம்பாவித சம்பவம் நடந்தால் போலீஸ் என்ன செய்கிறது என்று தான் கேட்பார்கள். ஆனால் நீங்கள் போலீசாருக்கு உதவிகரமாக செயல்பட்டு வருகிறீர்கள். ஊர்க்காவல்படையினர் கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனும் பணியாற்றி வருகிறீர்கள். இந்த சேவை தொடர வேண்டும், .
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் ஊரக்காவல்படை சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் ஊர்க்காவல்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஊர்க்காவல்படை மண்டல துணை தளபதி மங்களேஸ்வரி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்