வந்தவாசி மின்வாரிய அலுவலகம் முன்பு தர்ணா நடத்திய வியாபாரி

மின்வாரிய அலுவலகம் முன்பு தர்ணா நடத்திய வியாபாரி

Update: 2021-09-08 17:30 GMT
வந்தவாசி

வந்தவாசி கெஜலட்சுமி நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவர் தனது வீட்டின் முன் பக்கத்தில் இருந்த கடையை காலி செய்துவிட்டு, கடை மின் இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்றித் தரக்கோரி கடந்த 4.1.2021 அன்று மின்வாரிய அலுவலகத்தில் மனு செய்தார். இதற்கான கட்டணமாக ரூ.118 கட்டியிருக்கிறார். ஆனாலும் இதுவரை கடைமின் இணைப்பு வீட்டு இணைப்பாக மாற்றி தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

இதுகுறித்து 3 முறை மின்வாரிய அலுவலகத்தில் மனு செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று புதிய மனுவுடன் மின்வாரிய அலுவலகத்திற்கு வந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த மின்வாரிய பொறியாளர் உடனே தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.

மேலும் செய்திகள்