விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
கடலாடி அருகே விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
சாயல்குடி,
கடலாடி அருகே ஒருவானேந்தல் கிராமத்தில் புதிதாக அமைந்துள்ள சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. யாகசாலை பூஜை, கோபூஜை முடிந்து கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் சுந்தர விநாயகர் கோவில் பரிவார தெய்வங்களுக்கும், விமான கோபுர கலசங்களுக்கும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர், விபூதி, மஞ்சள் பொடி உள் ளிட்ட 16 வகையான அபிஷேக அலங்காரங்கள் தீபாரதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் கடலாடி, சாயல்குடி, ஆப்பனூர், ஏனாதி, கிடாத்திருக்கை உள்ளிட்ட சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு பிரசாதம் பெற்று சென்றனர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.