மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
அரக்கோணம்
ராணிபேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகே உள்ள கல்பனாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகுமார் என்கிற ராஜன் (வயது 43). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை, மோட்டார் சைக்கிளில் பள்ளியில் விடுவதாகக்கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாரதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஜெயக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.