வாலிபர் கைது
தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேனி :
மயிலாடும்பாறை அருகே சிறப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா (வயது 31). இவர், வீட்டில் மகனுடன் இருந்த 36 வயது பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் இதை தடுக்க முயன்ற அந்த பெண்ணின் மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் கடமலைக்குண்டு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தையாவை கைது செய்தனர்.