தூக்குப்போட்டு பெண் தற்கொலை
ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு கிராமத்தில் பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆண்டிப்பட்டி :
ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி பாண்டியம்மாள் (வயது 32). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மனமுடைந்த பாண்டியம்மாள் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.