அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2021-09-08 12:46 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சா.ராசு தலைமை தாங்கினார். செயலாளர் செஞ்சி மணி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் ஞானசேகரன் தொடங்கி வைத்து பேசினார். 

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்களுக்கு செலவினத்தை முழுமையாக காப்பீட்டு நிறுவனம் வழங்கவில்லை என்றும் செலவு செய்த முழு பணத்தையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் வட்ட கிளை தலைவர்கள் சாம்ராஜ், கோவிந்தராஜ், சந்திரசேகர், கார்மேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் ரங்கன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்