அவினாசி
அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிரதிவாரம் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்திற்கு 539முட்டை பருத்தி வந்திருந்தது. இதில் ஆர்.சி.எச்.ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 7000 முதல் ரூ.8219 வரையிலும், மட்டரகம் குவிண்டால் ரூ. 2500 முதல் ரூ. 5000 வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ. 14 லட்சத்து 15 ஆயிரம் ஆகும். இந்த தகவலை சங்கமேலாண்மை இயக்குனர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.