நெல்லை:வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது
வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது
நெல்லை:
நெல்லை டவுனை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 53). இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் விற்பனை செய்வதற்காக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 80 புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அய்யா சாமியை கைது செய்து, புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.