ஊரக உள்ளாட்சி தேர்தல்: 204 ஊராட்சி தலைவர் பதவிக்கான இடஒதுக்கீடு பட்டியல் வெளியீடு
ஊரக உள்ளாட்சி தேர்தல் 204 ஊராட்சி தலைவர் பதவிக்கான இடஒதுக்கீடு பட்டியல் வெளியீடு
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 204 ஊராட்சி தலைவர்கள் பதவிக்கான இடஒதுக்கீடு வெளியிடப்பட்டு உள்ளது.
அம்பை-சேரன்மாதேவி யூனியன்
நெல்லை மாவட்டம் ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள 204 ஊராட்சி தலைவர் பதிக்கான இடஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி அம்பை யூனியனில் மொத்தம் 13 ஊராட்சிகள் உள்ளன. இதில் கோடாரங்குளம் தலைவர் பதவி எஸ்.சி. பெண்களுக்கும், வெள்ளங்குழி எஸ்.சி. பொதுப்பிரிவுக்கும், அடையக்கருங்குளம், ஆயன்திருவாலீசுவரம், மன்னார்கோவில், சாட்டுப்பத்து, வாகைகுளம், வைராவிகுளம் ஆகிய ஊராட்சிகளின் தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கும், அயன்சிங்கம்பட்டி, பிரம்மதேசம், சிவந்திபுரம், தெற்கு பாப்பான்குளம், ஜமீன் சிங்கம்பட்டி ஆகிய ஊராட்சிகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
சேரன்மாதேவி யூனியனில் 12 ஊராட்சிகள் உள்ளன. பொட்டல் மற்றும் வெங்கட்ரெங்கபுரம் ஊராட்சிகளின் தலைவர் பதவி எஸ்.சி. பெண்களுக்கும், கூனியூர் எஸ்.சி. பொதுப்பிரிவுக்கும், மலையான்குளம், மூலச்சி, தெற்கு அரியநாயகிபுரம், தெற்கு வீரவநல்லூர் பொதுப்பிரிவு பெண்களுக்கும், கரிசல்பட்டி, புதுக்குடி, திருவிருத்தான்புள்ளி, உலகன்குளம், வடக்கு காருகுறிச்சி பொதுப்பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
களக்காடு யூனியனில் 17 ஊராட்சிகள் உள்ளன. இதில் சீவலப்பேரி எஸ்.சி. பெண்களுக்கும், தளவாய்புரம் எஸ்.சி. பொதுப்பிரிவுக்கும், தேவநல்லூர், கடம்போடுவாழ்வு, கள்ளிகுளம், கீழகாடுவெட்டி, பத்மநேரி, புலியூர்குறிச்சி, சூரங்குடி, வடுகச்சிமதில் ஆகிய ஊராட்சிகள் பெண்கள் பொது பிரிவுக்கும், இடையன்குளம், கீழகருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், மலையடிபுதூர், படலையாா்குளம், செங்களாகுறிச்சி, சிங்கிகுளம் ஆகிய ஊராட்சிகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மானூர் யூனியன்
நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக 43 ஊராட்சிகளை கொண்ட யூனியனாக மானூர் யூனியன் அமைந்துள்ளது. இங்குள்ள கங்கைகொண்டான், கட்டாரன்குளம், சுத்தமல்லி, தெற்குபட்டி, உக்கிரன்கோட்டை, வெள்ளப்பனேரி ஆகிய ஊராட்சிகளின் தலைவர் பதவி எஸ்.சி. பெண்களுக்கும், செழியநல்லூர், களக்குடி, பேட்டை ரூரல், சுண்டன்குறிச்சி, வாகைகுளம், வன்னிகோனேந்தல் ஆகிய ஊராட்சிகளில் தலைவர் பதவி எஸ்.சி. பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அழகியபாண்டியபுரம், அலங்காரபேரி, எட்டான்குளம், கானார்பட்டி, கருங்காடு, குப்பக்குறிச்சி, மேல இலந்தகுளம், நரிக்குடி, பாலாமடை, பல்லிக்கோட்டை, பிராஞ்சேரி, சேதுராயன்புதூர், திருப்பணிகரிசல்குளம், தென்பத்து, துலுக்கர்குளம், வல்லவன்கோட்டை ஆகிய ஊராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அச்சம்பட்டி, சித்தார்சத்திரம், தேவர்குளம், குறிச்சிகுளம், மதவக்குறிச்சி, மானூர், மாவடி, மூவிருந்தாளி, நாஞ்சான்குளம், நரசிங்கநல்லூர், பிள்ளையார்குளம், புதூர், தடியம்பட்டி, தாழையூத்து, தென்கலம் ஆகிய ஊராட்சிகள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
நாங்குநேரி யூனியன்
நாங்குநேரி யூனியனில் சடையநேரி வெங்கட்ராயபுரம், தெற்கு நாங்குநேரி ஆகிய ஊராட்சிகள் எஸ்.சி. பெண்களுக்கும், காடன்குளம் திருமலாபுரம், பாப்பான்குளம், தோட்டாக்குடி ஆகிய ஊராட்சிகள் எஸ்.சி. பொதுப்பிரிவுக்கும், அரியகுளம், இறைப்புவாரி, இட்டமொழி, கூந்தன்குளம், மறுகால்குறிச்சி, பூலம், ராஜாக்கள்மங்கலம், ராமகிருஷ்ணாபுரம், செண்பகராமநல்லூர், சிங்கநேரி, விஜயநாராயணம் ஆகிய ஊராட்சிகள் பெண்கள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அ.சாத்தான்குளம், அழகப்பபுரம், ஆழ்வாநேரி, சிந்தாமணி, தளபதி சமுத்திரம், இளங்குளம், கரந்தாநேரி, முனைஞ்சிபட்டி, பருத்திபாடு, சங்கனான்குளம், உன்னங்குளம் ஆகிய ஊராட்சிகள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
பாளையங்கோட்டை யூனியன்
பாளையங்கோட்டை யூனியனில் கீழநத்தம், மணப்படைவீடு, பொன்னாக்குடி, சீவலப்பேரி ஆகிய ஊராட்சிகள் எஸ்.சி. பெண்களுக்கும், மருதூர், நடுவக்குறிச்சி, பாளையஞ்செட்டிகுளம், ரெட்டியார்பட்டி எஸ்.சி. பொதுப்பிரிவுக்கும், அரியகுளம், இட்டேரி, கீழப்பாட்டம், கொங்கந்தான்பாறை, குன்னத்தூர், முன்னீர்பள்ளம், நொச்சிகுளம், சிவந்திபட்டி, தருவை, திடீயூர், உடையார்குளம் ஆகிய ஊராட்சிகள் பொதுப்பிரிவு பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
கான்சாபுரம், மேலபாட்டம், மேலபுத்தனேரி, மேலதிடீயூர், முத்தூர், புதுக்குளம், ராஜவல்லிபுரம், ராமையன்பட்டி, செங்குளம், திருமலைக்கொழுந்துபுரம், திருவேங்கடநாதபுரம் ஆகிய ஊராட்சிகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
பாப்பாக்குடி-ராதாபுரம் யூனியன்
பாப்பாக்குடி யூனியனில் கொண்டாநகரம் எஸ்.சி. பெண்களுக்கும், இடைகால், மைலப்புரம் எஸ்.சி. பொதுப்பிரிவுக்கும், அத்தாளநல்லூர், கபாலிபாறை, மேலக்கல்லூர், பழவூர், ரெங்கசமுத்திரம், சங்கன்திரடு, திருபுடைமருதூர் ஆகிய ஊராட்சிகள் பொதுப்பிரிவு பெண்களுக்கும், அரிகேசவநல்லூர், கோடகநல்லூர், பள்ளகால், பாப்பாக்குடி, சீதபற்பநல்லூர், வடக்கு அரியநாயகிபுரம், வெள்ளாளன்குளம் ஆகிய ஊராட்சிகள் பொது ப்பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
ராதாபுரம் யூனியனில் கோட்டைகருங்குளம் எஸ்.டி. பொதுப்பிரிவுக்கும், ஆனைகுடி, பரமேசுவரபுரம் ஊராட்சிகள் எஸ்.சி. பெண்களுக்கும், கரைசுத்துபுதூர், சவுந்தரபாண்டியபுரம் ஆகிய ஊராட்சிகள் எஸ்.சி. பொதுப்பிரிவுக்கும், அப்புவிளை, சிதம்பராபுரம், கரைசுத்து நவ்வலடி, கரைசுத்து உவரி, கூடங்குளம், கும்பிகுளம், கூத்தன்குழி, உவரி, ராதாபுரம், தெற்கு கள்ளிகுளம், உறுமன்குளம் ஆகிய ஊராட்சிகள் பொதுப்பிரிவு பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அணைக்கரை, இடையன்குடி, கஸ்தூரிரெங்கபுரம், குமாரபுரம், குட்டம், மகாதேவன்குளம், முதுமொத்தன்மொழி, சமூகரெங்கபுரம், திருவம்பலாபுரம், உதயத்தூர், விஜயாபதி ஆகிய ஊராட்சிகள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
வள்ளியூர் யூனியன்
வள்ளியூர் யூனியனில் காவல்கிணறு எஸ்.சி. பெண்களுக்கும், கண்ணநல்லூர் எஸ்.சி. பொதுப்பிரிவுக்கும், அ.திருமலாபுரம், அச்சம்பாடு, அடங்கார்குளம், ஆவரைக்குளம், சிதம்பராபுரம் யாக்கோபுரம், லெவிஞ்சிபுரம், பழவூர், தெற்கு வள்ளியூர் ஆகிய ஊராட்சிகள் பொதுப்பிரிவு பெண்களுக்கும், ஆனைகுளம், செட்டிகுளம், தணக்கர்குளம், இருக்கன்துறை, கோவன்குளம், தெற்கு கருங்குளம், வடக்கன்குளம், வேப்பிலான்குளம் ஆகிய ஊராட்சிகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.