அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா

ராஜபாளையத்தில் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள் என 59 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2021-09-07 21:04 GMT
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள் என 59 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 
அரசு பள்ளி ஆசிரியை 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செண்பக தோப்பு சாலையில் ராம்நகரில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வரும் ஒரு ஆசிரியைக்கு கடந்த 3 நாட்களாக காய்ச்சல் இருந்ததால் ராஜபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் கொரோனா பரிசோதனை செய்தார்.
இந்தநிலையில் நேற்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
59 பேருக்கு பரிசோதனை 
இந்தநிலையில் அவர் பணியாற்றிய பள்ளியில் உள்ள 45 மாணவ-மாணவிகள், 10 ஆசிரியர்கள், இதர பணியாளர்கள் 4 பேர் என மொத்தம் 59 பேருக்கு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்