ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2021-09-07 20:41 GMT
மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். 1-1-2017 முதல் ஓய்வூதியம் மறுநிர்ணயம் செய்யப்பட வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கொரோனாவால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய ஓய்வூதியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஈரோடு டெலிபோன் பவன் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய அரசு ஊழியர் இணைப்புக்குழு செயலாளர் என்.ராமசாமி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட செயலாளர் சின்னசாமி, தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஓய்வூதியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மாணிக்கம், சின்னையன், பரமேஸ்வரன், பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்