மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; முதியவர் பலி
ஈரோடு-கரூர் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
நொய்யல்,
கார் மோதி முதியவர் பலி
நொய்யல் குறுக்கு சாலை அருகே அண்ணா நகரை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 62). இவர் அருகே உள்ள ஓட்டலுக்கு சாப்பாடு வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் சாப்பாடு வாங்கி கொண்டு ஈரோடு-கரூர் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் ெசன்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக சென்ற கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த உலகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பிரேத பரிசோதனை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர் பலியான உலகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற கார் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.