நாட்டறம்பள்ளி அருகே மனைவியை பயமுறுத்த விஷம் குடித்த தொழிலாளி சாவு

நாட்டறம்பள்ளி அருகே மனைவியை பயமுறுத்துவதற்காக குடிபோதையில் விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2021-09-07 17:49 GMT
ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே மனைவியை பயமுறுத்துவதற்காக குடிபோதையில் விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விஷம் குடித்தார்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை கல்நார்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சரவணன் (வயது 35). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி நாகலட்சுமி என்கின்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். சரவணன் அடிக்கடி மது போதையில் வீட்டில் தனது மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சரவணன் மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். தனது மனைவியை பயமுறுத்துவதற்காக வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்துள்ளார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதனால் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த மனைவி அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சைபெற்று வந்த சரவணன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 
இது குறித்து அவரது மனைவி நாகலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்