ஜோலார்பேட்டை பகுதியில் கடை கடையாக கொரோனா தடுப்பூசி போடும் பணி
கடை கடையாக கொரோனா தடுப்பூசி போடும் பணி
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வணிகர்களின் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதனால் திருப்பத்தூர் சுகாதாரத் துறை துணை இயக்குனர் செந்தில் ஆலோசனைபேரில் ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் பி.சுமதி தலைமையில் ஜோலார்பேட்டை அரசு டாக்டர் புகழேந்தி, சுகாதார ஆய்வாளர்கள் கோபி, பார்த்தசாரதி, கருணாகரன், சுனிதா மேரி, மற்றும் பொன்னேரி ஊராட்சி செயலாளர் சின்னத்தம்பி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி கிராமத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் நேரடியாக சென்றனர்.
அங்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத கடை உரிமையாளர் மற்றும் பணியாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டனர். மேலும் ஜோலார்பேட்டை நகரம் மற்றும் ஒன்றியம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளுக்கும் நேரடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.