கொப்பரை தேங்காய் வரத்து குறைந்தது
எண்ணெய் மார்க்கெட் சரிந்ததால் கொப்பரை தேங்காய் வரத்து குறைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
எண்ணெய் மார்க்கெட் சரிந்ததால் கொப்பரை தேங்காய் வரத்து குறைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொப்பரை தேங்காய் ஏலம்
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப் பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு பொள்ளாச்சி, ஆனைமலை சுற்று வட்டாரம் மற்றும் உடுமலை பகுதியை சேர்ந்த 102 விவசாயிகள் கொப்பரை தேங்காயை கொண்டு வந்தனர்.
இதை 9 வியாபாரிகள் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். கொப் பரை தேங்காய் தரம் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. அதன் படி 248 மூட்டை முதல் தர கொப்பரை தேங்காய் ரூ.92 முதல் ரூ.102.25 வரையும், 217 மூட்டை 2-ம் தர கொப்பரை தேங்காய் ரூ.70.40 முதல் ரூ.81 வரையும் ஏலம் போனது.
அதிகாரி ஆய்வு
கடந்த வாரத்தை விட 27 மூட்டை வரத்து குறைந்து இருந்தது. மேலும் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. இந்த நிலையில் முன்னதாக ஏலத்தை கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் கவுசல்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் உடன் இருந்தார். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
தற்போது கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத் ஊரடங்கு அமலில் உள்ளதால் எண்ணெய் பயன்பாடு குறைந்து உள்ளது. இதனால் எண்ணெய் மார்க்கெட் சரிந்து உள்ளது. இதன் காரணமாக விலை உயராததால் கொப்பரை தேங்காய் வரத்து குறைந்து உள்ளது.
செல்போனுக்கு தகவல்
தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம் மூலம் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறுகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் இடைத்தரகர்கள் குறுக்கீடு, சிண்டிகேட் போன்றவை கிடையாது.
விவசாயிகள் செல்போனுக்கு கொப்பரை தேங்காயின் எடை, விலை விவரம் குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.