விநாயகர் வேடத்தில் வந்து மனு அளித்த இந்து அமைப்பினர்

விநாயகர் வேடத்தில் வந்து மனு அளித்த இந்து அமைப்பினர்

Update: 2021-09-07 17:09 GMT
வேலூர்

அனைத்து இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில செயற்குழு உறுப்பினர் அசோக்குமார் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் ஒருவர் விநாயகர் வேடமிட்டு வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். 

அவர்கள் கலெக்டர் அலுவலக அதிகாரியிடம் அளித்த மனுவில், எங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடி வருகிறோம். ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதித்துள்ளது. எங்கள் கூட்டமைப்பு சார்பில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழாவை வருகிற 10-ந் தேதி கொண்டாட அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்து அமைப்பினர் மனு கொடுக்க விநாயகர் வேடத்தில் வந்ததால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிதுநேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்