ஒடுகத்தூர் அருகே மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
அணைக்கட்டு
ஒடுகத்தூரை அடுத்த வளையல்காரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரய்யா. இவரது மனைவி குணம்மாள் (வயது 70). நேற்று காலை 11 மணி அளவில் குணம்மாள் நிலத்திற்கு நடந்துசென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் குணம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துச்சென்று விட்டனர்.
இதுகுறித்து குணம்மாள் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.