போடியில் கஞ்சா வைத்திருந்த 3 பெண்கள் கைது
போடியில் கஞ்சா வைத்திருந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
போடி:
போடியில் நேற்று நகர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கீழத்தெரு பேச்சியம்மன் கோவில் அருகே கையில் பையுடன் ஒரு மூதாட்டி நின்று கொண்டு இருந்தார். அவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். இதில் அவர் அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி (வயது 65) என்பதும், பையில் 1¼ கிலோ கஞ்சா பதுக்கி வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபோல போடி போஜன் பூங்கா அருகே கஞ்சா வைத்திருந்த கோடாங்கிபட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பஞ்சம்மாள் (75), போடி வரகுணன் சந்து பகுதியை சேர்ந்த செல்வராணி (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.