மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வடமதுரை பேரூராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-07 13:07 GMT
வடமதுரை: 

வடமதுரை பேரூராட்சி நன்னிஆசாரியூர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், வடமதுரை பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் வடமதுரை ஒன்றிய செயலாளர் மலைச்சாமி தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகி கருப்பையா முன்னிலை வகித்தார். 

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அருள்செல்வன், முத்துசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் அவர்கள், நன்னி ஆசாரியூர் செல்லும் சாலையில்  உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்கக்கோரி கோஷமிட்டனர். 

மேலும் செய்திகள்