கொரோனா தடுப்பூசி முகாம்

ஆலங்குளம் அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Update: 2021-09-06 21:31 GMT
ஆலங்குளம், 
ஆலங்குளம் எஸ்.எம்.எஸ்.கல்லூரியில் கொரோனா தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி நிறுவனரும், தலைவருமான முத்துவாழி தலைமை தாங்கினார். வட்டார மருத்துவர் டாக்டர் செந்தட்டி காளை தலைமையில், சுகாதார ஆய்வாளர் மதியரசு மற்றும் செவிலியர்கள் அடங்கிய சுகாதார குழுவினர் 150 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். இதில் கீழாண்மறைநாடு கிராமத்தில் 48 பேருக்கு, ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் சீனிவாசன் தலைமையிலும், மேலாண்மறைநாடு கிராமத்தில் 100 பேருக்கு அப்பயநாயக்கர் பட்டி ஊராட்சி தலைவர் கணேஷ்குமார் தலைமையிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் செய்திகள்