பணத்தை திருட முயன்றவருக்கு தர்ம அடி கொடுத்த மூதாட்டி

பணத்தை திருட முயன்றவருக்கு மூதாட்டி தர்ம அடி கொடுத்தார்.

Update: 2021-09-06 20:27 GMT
திருவெறும்பூர்
திருவெறும்பூர் கடைவீதியில் கீரை மற்றும் வாழைப்பழம் விற்கும் மூதாட்டி கமலம் (வயது 75). இவர் நேற்று முன்தினம் இரவு விற்பனையை முடித்துவிட்டு விற்ற பணத்தை சுருக்கு பையில் வைத்துக் கொண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு கடை வாசல் முன்பு படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது மர்மநபர் ஒருவர் செல்போன் பேசிக்கொண்டே மூதாட்டியின் சுருக்குப்பையில் இருந்த பணத்தை திருட முயன்றார். அப்போது திடுக்கிட்டு எழுந்த அந்த மூதாட்டி, அந்த மர்ம நபரை பிடித்து சரமாரியாக துடைப்பத்தால் அடித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. பின்னர் அந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த மூதாட்டியின் வீரத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். கடந்த மாதம் இதே மூதாட்டியிடம் வியாபாரத்திற்காக கடன் வாங்கி வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்