அமாவாசையன்று வெறிச்சோடிய அக்னி தீர்த்த கடற்கரை
தடை உத்தரவு காரணமாக அமாவாசையன்று அக்னி தீர்த்த கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
அமாவாசை நாட்களில் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனிதநீராட பக்தர்கள் குவிவது வழக்கம். கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஆவணி மாத அமாவாசையான நேற்று அக்னி தீர்த்த கடலில் நீராடவும், ராமநாதசுவாமி கோவிலில் தரிசிக்கவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. எனவே அக்னி தீர்த்த கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டதையும், அங்கு போலீசார் பாதுகாப்புக்கு நின்றதையும் படத்தில் காணலாம்.