மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 3 பேர் கைது

தேவகோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-09-06 18:43 GMT
தேவகோட்டை,

தேவகோட்டை அம்மாச்சி கோவில் நந்தவனத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (வயது 60).அவரது தம்பி சேகர் (55) உறவினர் தொண்டி கருங்காலக்குடி முருகன் (34) ஆகிய 3 பேரும் தேவகோட்டை அருகே உள்ள மணிமுத்தாறில் மோட்டார் சைக்கிள்களில் மணல் மூடைகளாக கட்டி தேவகோட்டை நகருக்கு கொண்டு சென்று விற்று வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் நேற்று காலை 3 பேரும் 2 மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த போது டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கையும் களவுமாக பிடித்து நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தார்.பின்னர் அந்த 3 பேரை போலீசார் ைகது செய்து தேவகோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மேலும் செய்திகள்