ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 9 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 20 ஆயிரத்து 221 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று சிகிச்சை முடிந்து 6 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 821 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 48 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 352 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.