குடியாத்தத்தில் தனியார் பள்ளிக்கு பூட்டுப்போட முயற்சி
தனியார் பள்ளி பூட்டுப்போட முயற்சி
குடியாத்தம்
குடியாத்தம் தரணம்பேட்டை ஆலியார் தெருவில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் நேற்று பள்ளிக்கு பூட்டுப் போடும் போராட்டம் அறிவித்திருந்தனர். அதைத்தொடர்ந்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில், டவுன் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் போலீஸ் தடுப்புகளை மீறி பள்ளிக்கு பூட்டுப் போட முயன்றனர். அப்போது போலீசாருக்கும், அவர்கலுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினரை, போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.