ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் அருகே கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-06 17:03 GMT
திண்டுக்கல் : 

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கியாஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோபால்பட்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதற்கு சங்கத்தின் சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் பாப்பாத்தி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி கோஷமிட்டனர். 

மேலும் செய்திகள்