மலைரெயில் சேவை மீண்டும் தொடக்கம்

மலைரெயில் சேவை மீண்டும் தொடக்கம்

Update: 2021-09-06 16:33 GMT
மலைரெயில் சேவை மீண்டும் தொடக்கம்
மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையத்தில் இருந்து  ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. 
இந்த ரெயில் போக்குவரத்து கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. தளர்வுகள் காரணமாக இடையே, இடையே மலைரெயில் மீண்டும் இயக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் 2-வது கொரோனா அலை பரவல் காரணமாக கடந்த 21.4.21-ந் தேதி முதல் மீண்டும் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. 

இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்  மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று ரெயில் சேவை தொடங்கியது. 

காலை முதலே மலை ரெயிலில்பயணம் செய்ய சுற்றுலாபயணிகள் தங்களது குடும்பத்தினருடன் வந்து ரெயிலில் அமர்ந்தனர். காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வழக்கம்போல்  அழகிய மலை ரயில் புறப்பட்டுச்சென்றது. 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.

மலை ரெயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து  ஊட்டிக்கு செல்ல முதல் வகுப்பு கட்டணமாக ரூ.600-ம்,  இரண்டாம் வகுப்பு கட்டணமாக ரூ.295-ம், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு முதல் வகுப்பு கட்டணம் ரூ.445-ம், இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ. 190-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்