வாணியம்பாடி அருகே தொழிலாளி இறந்த துக்கம் தாங்காமல் அக்காவும் உயிரிழந்தார்

வாணியம்பாடி அருகே தொழிலாளி இறந்த துக்கத்தில், அக்காவும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-09-06 13:53 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே தொழிலாளி இறந்த துக்கத்தில், அக்காவும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளி சாவு

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த தெக்குபட்டு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 60), கூலி தொழிலாளி. இவர் தனது அக்கா கிருஷ்ணவேணி (63) என்பவரின் மகளை திருமணம் செய்து கொண்டு, அக்கா வீட்டிலேயே வசித்து வந்தார். மேலும் அக்காவையும் பன்னீர்செல்வம்தான் கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பன்னீர்செல்வம் நேற்று திடீரென மரணம் அடைந்தார். 

அக்காவும் உயிரிழந்தார்

இந்த தகவலை அறிந்த பன்னீர்செல்வத்தின் அக்கா கிருஷ்ணவேணி இனி நம்மை கவனிக்க ஆளில்லையே என்ற துக்கம் தாளாமால் கதறி அழுதுக்கொண்டே இருந்தார். அப்போது சிறிது நேரத்தில் தம்பியின் உடல் அருகே சாயந்த அவரும் இறந்து போனார். ஒரே நேரத்தில் அக்கா, தம்பி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்