கிராமப்புறங்களில் திறமைமிக்க விளையாட்டு வீரர்களை அடையாளம் காண வேண்டும் - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் பேச்சு

பிட் இந்தியா திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் திறமைமிக்க விளையாட்டு வீரர்களை அடையாளம் காண வேண்டும் என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறினார்.

Update: 2021-09-05 20:57 GMT
பெங்களூரு:

உடற்பயிற்சி கூடம்

  மத்திய விளையாட்டு-இளைஞர் நலத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் நேற்று பெங்களூரு வந்தார். அவர் பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவரை கர்நாடக விளையாட்டு மந்திரி நாரயாணகவுடா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  இதில் நாராயணகவுடா பேசுகையில், "மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து தாலுகாக்களில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. விளையாட்டு மையங்களில் திறந்தவெளி அரங்கம், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளை கவனத்தில் வைத்து அம்ருத விளையாட்டு தத்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளது" என்று விவரித்தார். அப்போது மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் பேசியதாவது:-

சாகச விளையாட்டு

  தற்போது உள்ள வசதிகளை பயன்படுத்தி விளையாட்டுகளை கிராமப்புற இளைஞர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். இதற்கு தேவையான உதவிகளை எனது துறை வழங்கும். ஒலிம்பிக் மற்றும் இதர சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கிராமப்புற வீரர்களே நல்ல முறையில் திறமையை வெளிப்படுத்துகிறார்கள். அதனால் பிட் இந்தியா திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் திறமைமிக்க விளையாட்டு வீரர்களை அடையாளம் காண வேண்டும்.

  சாகச விளையாட்டு மையங்கள் இன்னும் அதிகமாக செயல்பட வேண்டும். கர்நாடக அரசு விளையாட்டுத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. விளையாட்டு ஆணையம், விளையாட்டு சங்கங்கள் உட்பட விளையாட்டில் ஆர்வம் காட்டும் அனைத்து அமைப்புகளும் ஒன்று இணைந்து செயல்பட வேண்டும். இதற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும்.
  இவ்வாறு அனுராக் தாக்கூர் பேசினார்.

மேலும் செய்திகள்