சிறந்த ஆசிரியர் விருது
வாசுதேவநல்லூரில் சிறந்த ஆசிரியர் விருது வழங்கும் விழா நடந்தது.
வாசுதேவநல்லூர்:
மதுரையில் உள்ள ஜெ.சி.ரெசிடென்ஸியில், தமிழ்நாடு கவுன்சில் ஆப் சிறப்பு பள்ளிகள் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு விழா நடந்தது. இதில் வாசுதேவநல்லூர் மகாத்மா காந்தி சேவா சங்கம் மூலம் செயல்பட்டு வரும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியின் ஆசிரியர் த.சங்கரசுப்பிரமணியன் சேவையை பாராட்டி மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நீதிபதி புகழேந்தி ஆகியோர் சிறந்த ஆசிரியருக்கான விருதான நற்சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினார்கள்.
விழாவில் மூத்த வழக்கறிஞர் சுவாமிநாதன், மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு கவுன்சில் ஆப் சிறப்பு பள்ளிகள் சேர்மன் ரவிக்குமார், செயலாளர் வெற்றிவேல் முருகன், பொருளாளர் கணேச பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிறந்த ஆசிரியர் விருது பெற்ற சங்கரசுப்பிரமணியனுக்கு வாசுதேவநல்லூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி செயலாளர் கு.தவமணி மற்றும் ஆசிரியர்கள் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.