மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
வெள்ளிச்சந்தை அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராஜாக்கமங்கலம்,
வெள்ளிச்சந்தை அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
தொழிலாளி
வெள்ளிச்சந்தை அருகே சூரப்பள்ளம் வடலிவிளையை சேர்ந்த மணிதங்கம் மகன் ராஜேஷ் (வயது 25), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு சூரப்பள்ளத்திலிருந்து பேயோடு சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே மோட்டார் சைக்கிள் வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த மோட்டார் சைக்கிள் ராஜேஷ் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாய மடைந்து சம்பவ இடத்திலேயே ராஜேஷ் பரிதாபமாக இறந்தார்.
2 பேர் படுகாயம்
மேலும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கன்னியாகுமரி மகாதானபுரத்தை சேர்ந்த கமல் (22) பின்னால் உட்கார்ந்து பயணம் செய்த மணிகண்டன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
அவர்கள் 2 பேரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.