வேலூரில் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

வேலூரில் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

Update: 2021-09-05 14:13 GMT
வேலூர்

வேலூர் சைதாப்பேட்டை தோபாசாமி தெருவை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (வயது 42), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி அபிராமி (40). இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 10 மாத ஆண்குழந்தை உள்ளது. அபிராமி கடந்த 1-ந் தேதி வீட்டு மாடிப்படியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அபிராமி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்தார். திருமணமாகி 2 ஆண்டுகளில் அபிராமி உயிரிழந்ததால் இதுதொடர்பாக வேலூர் உதவிகலெக்டர் வெங்கட்ராமன் (பொறுப்பு) விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்