மத்தூர் அருகே தொழிலாளி தற்கொலை
மத்தூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்:
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்காருபேட்டை பக்கமுள்ளது குடிகோட்டை சேர்ந்தவர் சங்கரப்பா (வயது 38). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மத்தூர் அருகே பெரிய ஜோகிப்பட்டியில் மாந்தோப்பு ஒன்றில் விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி மத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரப்பா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.