பிளஸ்-2 மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
பிளஸ்-2 மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள தலையாட்டுமந்து பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம்(வயது 19). இவருக்கும், 17 வயது பிளஸ்-2 மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.
இதற்கிடையே ஜீவானந்தம் திருமண ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனால் மாணவி கர்ப்பிணியானார்.
இதை அறிந்த அவரது தாயார், ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் ஜீவானந்தம் பாலியல் பலாத்காரம் செய்ததில் மாணவி கர்ப்பிணியானது உறுதியானது. பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, போலீசாரால் ஜீவானந்தம் கைது செய்யப்பட்டார்.