மலைப்பாதையில் உருண்டு விழுந்த கற்கள்

கன்னிவாடி அருகே மலைப்பாதையில் கற்கள் உருண்டு விழுந்தன.

Update: 2021-09-04 17:00 GMT
கன்னிவாடி:

கன்னிவாடி அருகே உள்ள தர்மத்துப்பட்டி-கோம்பையில் இருந்து அமைதிச்சோலை, தோனிமலை பிரிவு, அழகு மடை, பன்றிமலை, ஆடலூர் செல்ல மலைப்பாதை உள்ளது. தற்போது அந்த பகுதியில் மழை பெய்து வருகிறது. 

இதன் எதிரொலியாக மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுகின்றன. மேலும் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் மலைப்பாதையில் பயணிப்போர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.


இதனால் மலைக்கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே பெரிய அளவிலான விபத்து ஏற்படுவதற்கு முன்பு, மலைப்பாதையை நெடுஞ்சாலைத்துறையினர் கண்காணித்து சீரமைப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்