வைகை ஆற்றில் மூழ்கி மூதாட்டி பலி

நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் மூழ்கி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-09-04 16:55 GMT
நிலக்கோட்டை:

 நிலக்கோட்டை அருகே உள்ள கல்கோட்டையை சேர்ந்தவர் சங்கராயி (வயது 65). கடந்த 2-ந்தேதி இவர், அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் சாமி கும்பிட செல்வதாக கூறி சென்றார். 

அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து விளாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை நிலக்கோட்டை அருகே உள்ள 10 கண் பாலம் என்னுமிடத்தில் வைகை ஆற்றில் சங்கராயி உடல் மிதப்பது தெரியவந்தது.

 இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் தலைமையிலான தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். பின்னர் சங்கராயியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இதுதொடர்பாக விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விசாரணையில், நிலக்கோட்டை அருகே பெரியார் பிரதான கால்வாயில் சங்கராயி குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக ஆற்று தண்ணீரில் அவர் அடித்து செல்லப்பட்டு இறந்தது தெரியவந்தது. 

மேலும் செய்திகள்