ஒரே நாளில் 56780 பேருக்குத் தடுப்பூசி

ஒரே நாளில் 56780 பேருக்குத் தடுப்பூசி

Update: 2021-09-04 16:33 GMT
கோவை

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

நேற்று காலை 9 மணி முதல் டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. 

நேற்று ஒரே நாளில் மட்டும் மாநகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் 178 மையங்களில் 53 ஆயிரத்து 220 கோவிஷீல்டு தடுப்பூசியும், 3,560 கோவேக்சின் தடுப்பூசியும் என மொத்தம் 56 ஆயிரத்து 780 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதில் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் ஆர்வத்து டன் வந்து தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர். 

தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே வகுப்புகளில் பங்கேற்க முடியும் என்று பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்