காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரம்
பெரும்பாறை அருகே காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பெரும்பாறை:
பெரும்பாறை அருகே உள்ள கே.சி.பட்டி, அரியமலை, நடுப்பட்டி, சேம்புடி ஊத்து, கல்லக்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
அதன்படி நேற்று அப்பகுதியில் உள்ள காபி தோட்டங்களில் காட்டு யானைகள் திடீரென புகுந்தன. பின்னர் தோட்டத்தின் முள்வேலி, இரும்பு கேட் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தின.
மேலும் தோட்டங்களில் பயிரிட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு போன்ற பயிர்களை நாசப்படுத்தின.
இதுகுறித்து தகவல் அறிந்த கன்னிவாடி வனவர் அறிவழகன் தலைமையில் வனக்காப்பாளர்கள் ரமேஷ்பாபு, திலகராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் புைகமூட்டம் போட்டும், பட்டாசு வெடித்தும் காட்டு யானைகளை வனப்பகுதியில் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.