அனுமதியின்றி வைக்கப்பட்ட 12 பேனர்கள் அகற்றம்
வேலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 12 பேனர்கள் அகற்றம்
வேலூர்
வேலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 12 பேனர்கள் அகற்றம்
வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறாமல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, பிறந்தநாள் விழா, கண்ணீர் அஞ்சலி, அரசியல் கட்சி நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து அவர் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்களையும் உடனடியாக அகற்றும்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட் ரமேஷ்பாபு, ராஜன்பாபு (கிராமஊராட்சி) ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் இன்று வேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
12 ஊராட்சிகளில் வைக்கப்பட்ட 12 பேனர்கள் அகற்றப்பட்டன.
அனுமதி பெறாமல் பேனர் வைக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.