தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூரில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-03 19:54 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் மேட்டூர் நாயுடு தெருவை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் நித்தியானந்தம் (வயது 22). இவர் ஒப்பந்ததாரரிடம் வேலை பார்த்து வந்தார். இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் அவரது தந்தை கண்டித்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து முனியசாமி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்