எரிசாராயம் பதுக்கி வைத்திருந்த கணவன், மனைவி கைது

எரிசாராயம் பதுக்கி வைத்திருந்த கணவன்- மனைவி கைது

Update: 2021-09-03 18:31 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை தாலுகா இனாம்காரியந்தல் கிராமத்தில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி தலைமையிலான போலீசார் இனாம்காரியந்தல் கிராமத்தில் சோதனை நடத்தினர். 

ப்போது அந்த பகுதியை சேர்ந்த வடிவேல் (வயது 65) என்பவரின் வீட்டின் பின்புறம் சுமார் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 15 கேன்களில் எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, வடிவேல் மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமி (40) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரை சேர்ந்த சண்முகம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்