மேலும் 9 பேருக்கு கொரோனா
தேனி மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்து 221 ஆக அதிகரித்தது.
மேலும் இந்த வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 7 பேர் நேற்று குணமாகினர். தற்போது மாவட்டத்தில் 81 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.