கொரோனா விழிப்புணர்வு

பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2021-09-03 17:31 GMT
முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் வட்டார வள மையம் சார்பில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் முகம்மது சுலைமான் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ஜாகீர் உசேன், உடற்கல்வி ஆசிரியர் கமால் பாட்சா ஆகியோர் முன்னிலை வைத்தனர். பள்ளி மாணவ- மாணவிகள் கொரோனாவில் இருந்து தப்பிக்க கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடை வெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பரமேசுவரன், சாரண ஆசிரியர் அலி அக்பர், காஜா மைதீன், கமலா, பர்வின், தாகியா பானு, கண்ணன், சையது அபுதாஹிர், ஆசிரியர் பயிற்றுனர் காமராஜ் உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்